Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

Google Code In போட்டியும், அதற்கான அறிவுறுத்தல்களும்

Google Code In

IT குருகுலம் மூலம் நாம் உங்களுக்கு அறியத் தருவது யாதெனில் பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் Google Code In  போட்டியில் பங்குபற்றி  உங்களின் திறமைகளை வெளிக்காட்ட ஒரு அறிய சந்தர்ப்மாகும்.

முதலில் இலவச திறந்த மென்பொருள் (Free and Open Source Software) FOSS பற்றி பார்ப்போம். உங்களுக்கு மிகவும் பரீட்ச்சயமானா Android, Mozilla Firefox, MySQL, Blender மற்றும் Ubuntu போன்ற மென்பொருட்கள் FOSS இற்கு மிகவும் இலகுவானவை. பெரும்பாலான திறந்த மென்பொருட்களின் (Open Source Software) விசேட தன்மையாக இருப்பது பொது மக்களின் சமுதாய வளர்ச்சிக்கு உதவுவதாகும்.

பாடசாலை மாணவ மாணவிகளாகிய நீங்கள் சமுதாயத்தின் வளர்ச்சியை மேம்படுத்த Google நிறுவனம் போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. November 18 தொடக்கம் January 6 வரையான கலப்பகுதியில் நடத்தப்படும்  Google Code-In என்ற போட்டியில் பங்குபற்றி பெறுமதியான பரிசில்களையும், சான்றிதழ்களையும், சிறந்த அனுபவத்தினையும்  பெற்றிடுங்கள்.

இதனுடன் பின்வரும் நிறுவனங்கள் பங்குபற்ருகின்றன.  ApertiumBRL-CADCopyleft Games Group,  DrupalHaiku,  KDERTEMS,  Sahana Software Foundation,  SugarLabs மற்றும்  Wikimedia Foundation.

இப்போட்டி இல் பங்குபற்றுவதட்க்கான அடிப்படை தகைமையாக 18/11/2013 அன்று 13-17 வயதிற்கு உட்பட்டவராக இருக்க  வேண்டும்.  அப்படியாயின் இப்போதே Google Code-In இல் பதிவு செய்யுங்கள்: Register Now.

பதிவு செய்தபின் பின்வருவனவற்றின் இலத்திரனியல் பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

  •  பதிவு செய்வதட்க்கான பத்திரத்தை இங்கே பெறுங்கள்.  Registration Documents.
  • பாடசாலை அடையாள அட்டை பிரதி, பெயர்,  புகைப்படம்,  பாடசாலை பெயர்,  கற்கும் வருடம் என்பன குறிப்பிட பட்டிருத்தல் வேண்டும். பாடசாலை அடையாள அட்டை இல்லை எனின் பாடசாலையில்  கற்பதற்கான கடிதம் சமர்ப்பிக்கபட வேண்டும்.

Google Code In

நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் (tasks) பின்வருவனவாக வகை படுத்தப்பட்டுள்ளது:

1. Code : Code ஐ எழுதுதல் அல்லது மாற்றியமைத்தல் தொடர்பான பணிகள்.
Eg : BRL-CAD.

2. ஆவணப்படுத்தல் / பயிற்சி அளித்தல் (Documentation/Training) : ஆவணங்களை உருவாக்குதல் /திருத்துதல் மற்றும் மற்றவர்களுக்கு மேலும் அறிய உதவி செய்தல் தொடர்பான பணிகள்.
Eg : Drupal

3. சென்றடைதல் / ஆராய்ச்சி (Outreach/Research) : சமுக நிர்வாகம் (community management), சந்தைபடுத்தல் (outreach/marketing) அல்லது பிரச்சனைகளை கண்டறிதல் மற்றும் தீர்வுகளை பரிந்துரைத்தல் தொடர்பான பணிகள்.
Eg : Sugar Labs

4. தர நிர்ணயம் (Quality Assurance) : code இன் உயர் தரத்தை பரிசோதித்தல் மற்றும் உறுதிப்படுத்தல் தொடர்பான பணிகள்.
Eg :  Sahana Software Foundation

5. பயனாளர் இடைமுகம் (User Interface) : பயனாளர் அனுபவம் தொடர்பான ஆராட்சி அல்லது  இடைமுகம் வடிவமைப்பு மற்றும் அதனுடனான தொடர்பு தொடர்பான பணிகள்.
Eg : Sugar Labs

மாணவர்கள் நிறைவு செய்கின்ற ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு புள்ளி வழங்கப்படும். அத்துடன் நிறைவு செய்கின்ற ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு சான்றிதழ் வழங்கப்படும். மற்றும் 3 பணிகளை நிறைவு செய்தால் 1 t-shirt வழங்கப்படும். போட்டியில் இறுதியில் ஒவ்வொரு பத்து (10) திறந்த மென்பொருள் நிறுவனமும் தங்கள் நிறுவனம் சார்பாக இரண்டு (2) இறுதிப் பரிசு வென்றவர்கள் பெயரை அறிவிக்கும்.

இறுதிப் பரிசு வென்ற இருபது மாணவர்களும் Google’s Mountain View, California, USA headquarters இற்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு மற்றும் தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலர் ஒருவருக்கான பரிசில் வழங்கும் வைபவத்திற்கு சமுகமளிக்கும் வாய்ப்பு மற்றும் Google engineers ஐ சந்திப்பதற்கான வாய்ப்பு மற்றும் San Francisco sun இல் ஒரு நாள் குதூகலமாக பொழுதை களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இன்றே பதிவு செய்து போட்டியில் பங்கு பற்றுங்கள்!!!

The following two tabs change content below.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *